பேரழகி
நம் விரல்கள்
பற்றிக் கொள்ளும் போது
நம் மோதிரங்கள்
என்ன பேசிக் கொள்ளும்
உனக்கு நானும் எனக்கு நீயும்
எழுதியவைகளை பற்றி
வெட்கத்தோடு
புன்னகைத்ததை பற்றி
கண்ணீர் நனைத்த
படுக்கை விரிப்புகளைப் பற்றி
சேமித்த ரோஜாக்கள் பற்றி
அந்தரங்கங்களின் தாகம் பற்றி
பிரிவுகளின் ஏக்கம் பற்றி
பேசிக் கொண்டிருக்கையில்
முத்தமிட முகம் பிடிக்கிறது விரல்கள்
பேச்சை நிறுத்திய மோதிரங்கள்
முத்தங்களில் நனைந்தது...
#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

No comments:
Post a Comment