பேரழகி
விழிகள் நான்கும் மொழிகள் பேசும்
புன்னகைப் பூக்கள் சிறகை விரிக்கும்
எப்போதாவது ஊடல்
குறைந்தபட்ச சாடல்
மௌனங்கள் தொலைக்கும் கெஞ்சல்
சிறு கொஞ்சல்கள் உரசி
கவிதைகள் பிறக்கும் வெட்கத்தில்,
வெளுத்த உதடுகள் சிவக்கும்
ஈடு இணையில்லா இணையரென
ஊர் பேசும் காலத்திற்கும்
காதல் நமக்கு துணையாய் நிற்கும்
அன்பில் பொழியும் முத்தங்களின்
மாமழை என்றுமே தொடரும்.
#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

No comments:
Post a Comment