Saturday, May 30, 2026

நிரூபிக்க முடியாத அன்பு

 பேரழகி

இதயத்தை

பிளந்துகாட்டி

 நிரூபிக்கப் போவுதில்லை 

நான்,

 நீ

இருக்கும் இதயத்தை

எப்படி பிளக்க முடியும் 

என்னால்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Friday, May 29, 2026

வார்த்தைகளின் காதலி

பேரழகி

உன்னைப் பற்றி

எழுதலாம் என்று

நினைக்கிறேன்

பிரியமான

எல்லா வார்த்தைகளும்

வந்து வரிசையில்

நிற்கிறது.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Thursday, May 28, 2026

கவிதைகளில் பிறந்த தாய்மை

  பேரழகி

வலியில்லாமல் 

பிரசவிக்கிறது 

அவளுக்கான கவிதைகள் 

அவள் வாசிக்கும் போது 

தொட்டிலாட்டுகிறது 

கடக்கும் நொடியில்

 நான் தாய்மை உணர்கிறேன்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Wednesday, May 27, 2026

முத்தங்களால் ஆறும் காயங்கள்

 பேரழகி

மெசியாவின் காயங்களை

உலகறியும்

தேவதையே

உன் காயங்களை

நான் மட்டுமே அறிவேன்,

முத்தங்களிட்டு

நான் அழுவேன்

விழும் கண்ணீர் துளிகள்

உன் காயங்கள் ஆற்றும்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Tuesday, May 26, 2026

காதலால் பசியாறும் வீடு

 பேரழகி

நான் 

ஒரு சத்தியம் 

செய்து தருகிறேன் 

நாம் குடிபுகும் 

புது வீட்டில் 

சமையலறை 

இல்லையென்று.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Monday, May 25, 2026

உறவில்லாத உரிமை

 பேரழகி

உரிமை சொல்லாத உறவாய் நீ, 

என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் 

மறைந்திருக்க....

வசந்தம் வராத இந்த வாழ்க்கையில் 

ஏன் உன் வாசம் மட்டும் வந்து போகிறது?

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Sunday, May 24, 2026

மௌனங்கள் பேசும் காதல்

பேரழகி

எனக்கும் உனக்கும் இடையே 

எத்தனையோ இருக்கிறது 

ரசிக்கும் மௌனங்கள், 

பகிரும் முத்தங்கள், 

கரையும் கண்ணீர்துளிகள், 

அணைக்கும் காதல் ஏக்கத்தோடு, 

பெரும் தவிப்பு 

இன்னும் எத்தனையோ... 

வெளிப்படையானவை சில

 ரகசியமானவை சில 

ஏன்? பொதுவானவை பல 

இந்த உலகிற்கும் கூட 

பேசுவாள் அவள்..

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Saturday, May 23, 2026

காகிதக் கப்பலில் மிதந்த காதல்

 பேரழகி

வழக்கம் போல

மேகம் கூடியது

என் கைகள்

இம் முறையும்

காகிதம் மடித்து

சில கப்பல்களை செய்தது,

அவளுக்கு

மழை பிடிக்கும்

கப்பல் பிடிக்கும்

கூடவே என்னையும்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Friday, May 22, 2026

அவள் கண்ணீரின் அர்த்தம்

பேரழகி

அன்பெனப்படுவது

எனக்காக

அவள்

சிந்தும்

கண்ணீரே.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Thursday, May 21, 2026

நீயே ஆரம்பம், நீயே முடிவு

Anitte Creations

எங்கோ தொடங்கி

எங்கோ முடிவதில்

கொஞ்சமும்

உடன்பாடில்லை

உனக்குள் தொடங்கி

உனக்குள்ளே

முடிய வேண்டும்

என்பதே

சமாதானம்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Wednesday, May 20, 2026

ஈரம் கசியும் நினைவுகள்

விரிசல் விழுந்த

சுவர்களில்

 ஈரம் கசிகிறது

 எத்தனை கண்ணீர் விட்டிருப்பாள் 

அவள்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Tuesday, May 19, 2026

சிறகுகள் கொண்ட காதல்

பறந்து

திரிய வேண்டிய

தேவதை அவள்

எனக்காகவே

நடமாடிக் கொண்டிருக்கிறாள்

சிறகு இருந்தும்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Monday, May 18, 2026

பூக்களை நேசிக்கும் அழகான பூ

அவள்

பூக்களை பார்த்து

ரசிப்பதோடு சரி

எந்தப் பூ?

இன்னொரு பூவை

கொய்யும்!

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Sunday, May 17, 2026

என் சிரிப்பின் ரகசியம்

நான்

தனியே சிரிப்பதாக பக்கத்தில்

இருந்தவர்கள்

பேசிக் கொண்டார்கள்

தேவதையோடு

கவியாடிக் கொண்டிருப்பது

அவர்களுக்கு தெரிய

நியாயம் இல்லை.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Saturday, May 16, 2026

அவள் மூச்சின் தென்றல்

முன் பின் 

 முகமறியாத 

 ரயில் பயணிகளுக்கு

 கையசைத்து சிரிக்கும்

 சிறுமியின் முகத்தை

 ஒத்து இருந்தது 

 அவள் முகம் 

 ஜன்னல் இருக்கை

 கிடைத்ததும் 

 சில்லென்று வீசிய 

 தென்றலை ஒத்திருந்தது 

 அவள் மூச்சு.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Thursday, May 14, 2026

நிழலாக நீளும் சூரியன்

சூரியன் நீ 

என் மேல் ஒளிர்கிறாய் 

நிழலாய் நீள்கிறது 

உன் பிம்பம்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Wednesday, May 13, 2026

வியர்வையிலும் காதல்

வியர்க்கும் போது 
கைக்குட்டையால் 
துடைத்துக் கொண்டாய் 
நதியை சுமந்த 
நாணத்தில் நனைகிறது 
கைக்குட்டை... 

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை
#கவிதைகள்
#காதல்கவிதை
#TamilPoetry
#TamilQuotes
#TamilKavithai
#LovePoetry
#PoetryLovers
#TamilWriter
#தமிழ்
#கவிஞன்
#மனதின்எழுத்துகள்
#Feelings
#QuoteOfTheDay
#TrendingNow
#ViralPoetry
#PoetryCommunity
#TamilLove
#AestheticWords
#WritersOfInstagram

Tuesday, May 12, 2026

தேவதை அருகில் வாழும் அதிர்ஷ்டக்காரர்கள்…

உன் 
அக்கம் பக்கத்து 
வீடுகளில் வசிப்பவர்கள் 
கொடுத்து வைத்தவர்கள்…
தேவதை நேரில் 
காண்பதென்றால் 
சும்மாவா?
-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #TamilPoetry #கவிதை #LoveQuotesTamil #TamilQuotes #தமிழ்_வரிகள் #KadhalKavithai #TamilLove #TamilWriter #கவிதைகள் #TamilStatus #TamilLines #PoetryLovers #TamilBlogger #TrendingTamil #TamilLyrics #LoveFeelings #தமிழ் #ViralPoetry #TamilCaption

Wednesday, May 6, 2026

கவிதை

பொழுது புலரும் 
ஒவ்வொரு காலையும் 
உன் முகம் பார்க்கும்
 நொடியில், 
எனக்குள்ளும் 
பூத்து விடுகிறது 
உன்னை ஒத்த 
ஒரு பூ.

-அனிட் ஜான்

மனதை தொடும் வரிகள்

#TamilPoetry #கவிதை #காதல்_கவிதை #TamilQuotes #LovePoetry #தமிழ்_வரிகள்

Saturday, May 2, 2026

நான் எழுதிய கவிதைகள்.

 பேரழகி உன் அழகை  வர்ணிக்கும் போது  மட்டுமே,  முழுமை பெறுகிறது நான் எழுதிய கவிதைகள். -அனிட் ஜான் To Buy DM Now #தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் ...