Showing posts with label LovePoetry. Show all posts

Monday, September 21, 2026

சின்னஞ்சிறு பறவைகளுக்கு அடைக்கலமும்

 பேரழகி

பெரும் மழை

புயல் வெள்ளம்

கடும் வறட்சி

அத்தனையும் தாங்கி

சின்னஞ்சிறு பறவைகளுக்கு

அடைக்கலமும்

நன்றி மறந்த மனிதர்களுக்கு

நிழலும் தரும் அவள்

ஆலமரம்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Sunday, September 20, 2026

ஒருவரும் இல்லாத சாலை

   பேரழகி

அது வழக்கமான

காலை இல்லை

அழகோடியது

மேகங்கள் கூடி

முன்னறிவிப்பு செய்தது

உன் வருகையை

எனக்கு முன்

மழைத் தூரல்கள்

முந்திக்கொள்ள பாக்கிறது

உன்னைத் தொட

விழும் துளிகளை

தட்டி விட்டு வருகிறாய்

என்னைச் சேர

காற்றில் உதிர்ந்த

இலைகள் சம்மதித்தது

உரசிக்கொள்ள

சந்தித்த நொடிகளில்

காத்திருப்புகள் கரைந்தது

இந்த ஒற்றை நொடிக்கு

இவ்வளவு சுகமா

கரை சேர்ந்து விட்டேன்

உன்னோடு

கரை சேர்ந்த என்னை

கையோடு கூட்டிச் செல்கிறாள்

எங்களை ஒத்த

இணைப் பறவைகளின் சத்தம்

கேட்கிறது

ஒருவரும் இல்லாத

சாலை

எங்களுக்கு சாதகமாக

இன்னும் நீள்கிறது

உன் குறுநடைக்கே

தள்ளாடுகிறது சாலை

அள்ளாடுகிறேன் நான்

காற்றுக்கு ஏற்றபடி

ஆடும் உன் கூந்தல் போல

உனக்கு ஏற்றபடி

நானும் நடக்கிறேன்

இப்படியே ...

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Saturday, September 19, 2026

நீ தேவதை

 பேரழகி

இதோ விழுந்துவிட்டேன் 

உன்னிடம்..

என் ஆயுள் ரேகையில்

பதிந்த அதே முகம்

சரணடைதலே

முதல்விதி

ஒப்படைத்து விட்டேன்

என்னை உன்னிடம்

ஒப்புதல் பெறாமலேயே

ஏற்றுக்கொள்வதும்

என்னைத் தேற்றிக் கொள்வதும்

தேவதையே... அது

உன் விருப்பம்

பரிதவிப்போடு உன்னை

வேண்டுகிறேன்.

ஆசிர்வாதங்களை

எதிர்பார்த்து

புன்னகையோடு இருக்கும்

உன் பூ முகம்

பாவி என்னை இரட்சிக்காதா?

எப்படிச் சொல்வேன்?

எப்படிச் சொல்லப் போகிறேன்?

நீ தேவதை

எப்படியும் மன்னிப்பாய்

என்ற நம்பிக்கையில்x

சொல்ல வருகிறேன்

தேக்கி வைத்த காதலை...

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Friday, September 18, 2026

என்றும் அவளுக்காக

 பேரழகி

அவள் காதல்

பெருங்கடல் அதில்

தவழும் அலை

நான்

நுரையாய் கரைந்து

கொண்டே இருப்பேன்

என்றும் அவளுக்காக.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Thursday, September 17, 2026

நேசங்களின் மிகுதியில்

  பேரழகி

தெறிக்கும் அவள்

கோபங்கள் பேரழகு

இறுதிவரை அவை

என்னைச் சுடவேயில்லை

நேசங்களின் மிகுதியில்

கரைந்து விடுகிறது

என்னை அடையும் முன்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Wednesday, September 16, 2026

உன் முகம்

  பேரழகி

எவர் அழுதாலும் 

ஞாபகம் வந்து விடுகிறது 

உன் முகம், ஆனால் 

எந்த கண்ணீரும் 

உனது ஆழத்தில் இல்லை 

என்னை கரைந்து போகச் செய்ய...

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Tuesday, September 15, 2026

ஒட்ட வைத்தவள்

 பேரழகி

உடைந்து சிதறிய

என் இதயக் கண்ணாடிக்குள்

அழகாக தெரிகிறது

அவளது நூறு பிம்பம்

என்னை

ஒட்ட வைத்தவள்

அவள் தானே.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Monday, September 14, 2026

என் நெஞ்சோடு கரைந்தாள்

 பேரழகி

வாசித்தேன்

உயிரை உறிஞ்சி

உணர்வில் கலந்தாள்

சுவாசித்தேன்

நாசியைத் துளைத்து

மூச்சில் இணைந்தாள்

நேசித்தேன்

காதலை கொடுத்து

என் நெஞ்சோடு கரைந்தாள்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Sunday, September 13, 2026

நம் காதல்

  பேரழகி

எதுகை நீ 

மோனை நான் 

கவிதையானது

நம் காதல்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Friday, September 11, 2026

தெரியாமல் தவிக்கிறேன் சில நேரம்

   பேரழகி

எல்லாம் தெரிந்த

உன் கண்களிடம்

என்ன பேசுவதென்றே

தெரியாமல் தவிக்கிறேன்

சில நேரம்

ரசிக்க மௌனம்

ஒரு காரணமாக இருக்கலாம்

என்பதை

உன் விழிகள் அறியும் தானே.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Thursday, September 10, 2026

என் பனி இரவுகள்

 பேரழகி

உன் காதல்

பார்வையின் 

கதகதப்பில் விடிந்தது 

என் பனி இரவுகள்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Wednesday, September 9, 2026

என் தூக்கத்திலும்

  பேரழகி

என்

தூக்கத்திலும்

மறக்க இயலாத

ஏக்கம் 

நீ..

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Monday, September 7, 2026

மனிதர்கள் மத்தியில்

 பேரழகி

பணத்தை தேடும்

மனிதர்கள் மத்தியில்

என் மனதை

தேடிய மனிதம் அவள்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Sunday, September 6, 2026

உன் நினைவு

 பேரழகி

உன் நினைவுகளை 

உள்ளிழுத்து 

நிரம்பி இருக்கிறது 

என் சுவாசப்பை.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers  

Saturday, September 5, 2026

பேரன்புக்காரி

 பேரழகி

சாமானியர்களுக்கு 

கை கொடுப்பாள் சக மனுஷியாக, 

சிறகு விரித்து நல்ல

சிந்தனை நிழல் பரப்புவாள், 

சிற்பியாக என்னை செதுக்குவாள், 

சினேகம் கொண்டு சீராட்டுவாள், 

என் காலடி மணலை சேகரிப்பாள், 

நான் சிகரம் தொட 

சிந்தனை செய்வாள் 

எந்நாளும் என்னை ஆளும் 

பேரன்புக்காரி.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

Thursday, September 3, 2026

சூடாக தேநீர் தரவா

  பேரழகி

பகல் பொழுது

அலுவலகத்தில்

பணி சிரமமென்று

மாலையில் அவளிடம்  

அலுத்துக் கொண்டேன்,

இன்னும் வீட்டில் வேலை

செய்து கொண்டிருக்கும்

அவள் என்னிடம்

அலுத்துக் கொள்ளாமல் கேட்கிறாள்.

"சூடாக தேநீர் தரவா" என்று...

அவள் தான்

தேவதை ஆயிற்றே...

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

Wednesday, September 2, 2026

தன்னலமில்லாச் சூரியன்

  பேரழகி

அவள் உறங்குகிறாள் 

யாரும் எழுப்பாதீர்கள் 

இன்று தாமதமாக 

விடியட்டும் பராவாயில்லை 

தன்னலமில்லாச் சூரியன் 

அவள்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

Tuesday, September 1, 2026

அவள் நிழலை முந்திக்கொண்டு

  பேரழகி

அந்தச் சூரியன்

உரிமை எடுத்துக் கொண்டு

நீட்டப் பார்க்கிறது

அவள் நிழலை

முந்திக்கொண்டு

என் மீது

தாங்கி விட்டேன் அவளை

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

Thursday, August 20, 2026

அழகை ரசித்த அவசரத்தில்

  பேரழகி

என்

கவிதைகளில்

சில பிழைகள் இருக்கலாம்

உன்

அழகை ரசித்த

அவசரத்தில்...

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

Wednesday, August 19, 2026

ஒரே ஒருமுறை பார்த்தால் போதும்

  பேரழகி

ஒரே ஒருமுறை

பார்த்தால் போதும்

என்றுதான் அவள் 

புகைப்படம் எடுத்து 

பார்க்கிறேன்

கடக்க முடியாமல்

நின்று விட்டேன்

இம்முறையும்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

சின்னஞ்சிறு பறவைகளுக்கு அடைக்கலமும்

 பேரழகி   பெரும் மழை புயல் வெள்ளம் கடும் வறட்சி அத்தனையும் தாங்கி சின்னஞ்சிறு பறவைகளுக்கு அடைக்கலமும் நன்றி மறந்த மனிதர்களுக்கு நிழலும் தரும...