Friday, August 14, 2026

அவள் இதயம்

 பேரழகி

எத்தனை தேடி இருப்பாள் 

எப்படி எல்லாம் உடைந்திருப்பாள் 

கண்ணீர் பெருகியிருக்குமே 

கைகள் நடுங்கியிருக்குமே 

சராசரியை விட 

எத்தனை வேகமாக துடித்ததோ 

அவள் இதயம்

உண்ண மறந்திருப்பாள்

உறக்கம் தொலைத்திருப்பாள்

உயிர் வலித்திருப்பாள்

நான் பேசாத நாட்களில்..

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

Thursday, August 13, 2026

ஒவ்வொரு நொடியும்

பேரழகி

கடக்கும்

ஒவ்வொரு நொடியும்

நான் அவளை

யோசிக்கிறேன்.

அவளோ

என்னை சுவாசிக்கிறாள்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers 

Monday, August 10, 2026

ஒற்றைச் சூரியன்

  பேரழகி

அத்தனை மேகங்களையும் 

கடந்து நிற்கும் 

ஒற்றைச் சூரியன் 

அவள்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Sunday, August 9, 2026

செல்வாள் அடுப்படிக்கு

 பேரழகி

பசிக்காமல் இருந்து

தொலைத்திருக்கலாம்

எனக்கு

பாவம் அவள்

எத்தனை முறைதான்

செல்வாள் அடுப்படிக்கு.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Saturday, August 8, 2026

பூக்களுக்கு பக்கத்தில்

 பேரழகி

பூக்களுக்கு பக்கத்தில்

செல்லாதே

உன் அழகை

சூடிக்கொள்ளும்.

                                     -அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Thursday, July 30, 2026

இயல்பு மாறாமல்

   பேரழகி

அவள் அவளாக

இயல்பு மாறாமல்

இருப்பதாலே

எனக்கும் முளைக்கிறது இரு சிறகுகள்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Tuesday, July 28, 2026

பிரபஞ்சத்தில் ஏதும் இல்லை

 பேரழகி

உனக்காக கொடுக்க என்னிடம்

எல்லாமும் இருக்கிறது,

உன் அன்பற்கு நிகராக கொடுக்க இந்த 

பிரபஞ்சத்தில் ஏதும் இல்லை 

என் தேவதையே...

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Sunday, July 26, 2026

நிகழ்கால தேவதை நீ

  பேரழகி

கடந்த காலத்தில் 

தொலைத்த... 

எதிர்காலத்திற்காக

சேமித்த...

நிகழ்கால தேவதை நீ.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Sunday, July 19, 2026

நீ மீட்டெடுத்து விடுவாய்

  பேரழகி

இம்முறையும் 

தொலைகிறேன் 

நீ மீட்டெடுத்து விடுவாய் 

என்ற அதே 

நம்பிக்கையில்...
-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Saturday, July 18, 2026

நான் எழுதிய கவிதைகள்.

 பேரழகி

உன் அழகை 

வர்ணிக்கும் போது 

மட்டுமே, 

முழுமை பெறுகிறது

நான் எழுதிய கவிதைகள்.
-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

வருகையே விடியல்

பேரழகி

என்

சூரியன் நீ

உன்

வருகையே விடியல்

அதுவே என்

கிழக்கு.
-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Wednesday, July 15, 2026

உன் காந்த விழிகள்

பேரழகி

எவ்வளவு கூட்டத்தில்

நான் இருந்தாலும்

உன்

காந்த விழிகள்

என்னை மட்டும்

ஈர்த்து விடுகிறது.
-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Sunday, July 12, 2026

தாயானாள் அவள்

பேரழகி

என்னைச் சுமந்து 

மீண்டுமொரு முறை 

தாயானாள் அவள். 
-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Friday, July 10, 2026

புத்தகத்தில் பொதிந்த காதல்

 பேரழகி

நான்

பூவாக இருந்தால்

சூடிக் கொள்கிறாள்

காய்ந்து சருகானால்

அவள்

புத்தகத்தில் பொதிந்து

பத்திரப்படுத்தி விடுகிறாள்

எப்படியிருந்தாலும்

ஏந்திக் கொள்கிறாள்

என்னை

கருணை மிகுந்தவள்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

மீசை தடவ வைத்த புருவம்

 பேரழகி

நீ 

புருவம் உயர்த்தும் 

போதெல்லாம் 

நான் 

மீசை தடவி 

வழிகள் அடைப்பதற்கு 

பெயர் வெட்கம்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Thursday, July 2, 2026

OUR Creations

To Buy DM Now

🌸 When Words Become Feelings: Poetry That Stays With You

Some books entertain.

Some books educate.

But a few books quietly become a part of your heart.

That is the power of poetry.

Every poem begins as a feeling—a memory, a dream, a silent tear, a smile, or a moment that words refuse to forget. Poetry gives emotions a voice and allows readers to discover pieces of themselves within every page.

At Anitte John Publications, we believe that poetry is more than literature. It is a journey of healing, hope, love, and inspiration.

Our poetry collections are written for readers who appreciate beautiful language, heartfelt emotions, and timeless thoughts that remain long after the final page is turned.

📖 Why Readers Love These Books

✨ Soulful poems that speak directly to the heart

💖 Honest emotions expressed through meaningful words

🦋 Beautiful writing that inspires reflection

🌸 A perfect companion for peaceful mornings or quiet evenings

📚 A thoughtful gift for poetry lovers and dreamers

Whether you're searching for comfort, inspiration, or simply a beautiful book to treasure, these collections offer a memorable reading experience.

💜 Every Page Has a Story

Our books are created for readers who believe that words have the power to heal, encourage, and transform lives.

Each poem invites you to pause, reflect, and reconnect with your own emotions.

If you love heartfelt poetry, these books deserve a place on your bookshelf.

🌷 Ready to Read?

Start your journey today.

📩 DM to Order: @authoranittejohn1113

📚 Published by: Anitte John Publications

Poetry that touches hearts... forever.

Saturday, May 30, 2026

நிரூபிக்க முடியாத அன்பு

 பேரழகி

இதயத்தை

பிளந்துகாட்டி

 நிரூபிக்கப் போவுதில்லை 

நான்,

 நீ

இருக்கும் இதயத்தை

எப்படி பிளக்க முடியும் 

என்னால்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Friday, May 29, 2026

வார்த்தைகளின் காதலி

பேரழகி

உன்னைப் பற்றி

எழுதலாம் என்று

நினைக்கிறேன்

பிரியமான

எல்லா வார்த்தைகளும்

வந்து வரிசையில்

நிற்கிறது.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Thursday, May 28, 2026

கவிதைகளில் பிறந்த தாய்மை

  பேரழகி

வலியில்லாமல் 

பிரசவிக்கிறது 

அவளுக்கான கவிதைகள் 

அவள் வாசிக்கும் போது 

தொட்டிலாட்டுகிறது 

கடக்கும் நொடியில்

 நான் தாய்மை உணர்கிறேன்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

Wednesday, May 27, 2026

முத்தங்களால் ஆறும் காயங்கள்

 பேரழகி

மெசியாவின் காயங்களை

உலகறியும்

தேவதையே

உன் காயங்களை

நான் மட்டுமே அறிவேன்,

முத்தங்களிட்டு

நான் அழுவேன்

விழும் கண்ணீர் துளிகள்

உன் காயங்கள் ஆற்றும்.

-அனிட் ஜான்

#தமிழ்கவிதை #கவிதைகள் #தமிழ் #TamilPoetry #TamilKavithai #LovePoetry #உணர்வுகள் #கவிஞன் #கவிதைவரிகள் #TamilQuotes #தமிழ்வரிகள் #PoetryLovers #தமிழன்பு #காதல்_கவிதை #WriterTamil #BloggerTamil #TamilWriter #கவிதைப்பக்கம் #TrendingPoetry #TamilBloggers

சின்னஞ்சிறு பறவைகளுக்கு அடைக்கலமும்

 பேரழகி   பெரும் மழை புயல் வெள்ளம் கடும் வறட்சி அத்தனையும் தாங்கி சின்னஞ்சிறு பறவைகளுக்கு அடைக்கலமும் நன்றி மறந்த மனிதர்களுக்கு நிழலும் தரும...